Sunday, 16 November 2008

சூர்யா படம் பாக்க போலாமா

வாரணம் ஆயிரம் நேத்து பாத்தாச்சு. தங்கமணிகள் எல்லாம் சூர்யா படம் பாக்க போலாம் அப்படீன்னா நிறைய ரங்கமணிகள் காதில ஏனோ புகை.

  • ஒரு சூர்யா ரசிகை வந்திருந்தாங்க. காக்க காக்க படத்தில சூர்யா அறிமுகக்காட்சியில விசிலடிச்சு ரவுசு பண்ணனும்னு பாத்தா செத்த மாதிரி அடிபட்டு கிடக்கறதுதான் அறிமுகக்காட்சி. வாரணம் ஆயிரத்தில நல்லா விசிலடிச்சு ஆசையைத்தீத்துக்கபோறேன் அப்படீன்னாங்க. பாவம் ஏமாந்து போனாங்க. அப்பா சூர்யா முதல் காட்சியில வர்றார். அஞ்சு நிமிசத்தில செத்தும் போறார். அப்பா சூர்யா ரகுவரனை ஞாபகப்படுத்தறார். கொஞ்சம் கூட சிவகுமாரை ஞாபகப்படுத்தவேயில்லை.

  • படம் முழு நீளப்படம். ஆனால் நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் படத்தில். அதனாலேயே படம் முழுவதும் பார்க்க முடிகிறது. காஷ்மீர்ல எடுத்த சில காட்சிகள் இருட்டில் சரியாகத்தெரியாமல் போகிறது. எம்டன் மகனில் வர்ற மாதிரி கண்டிப்பான அப்பா அல்லது தவமாய் தவமிருந்துல வர்ற மாதிரி தியாகி அப்பா இவங்களை மட்டுமே பிடிச்ச ஆளுங்க இந்தப்படத்தை பாத்திராதீங்க. உங்க அப்பா நண்பனா , ரோல் மாடலா இருந்திருந்தா அல்லது இருக்கணும்னு விருப்படும் ஆளா இருந்தா போய் பாருங்க.

  • தியேட்டரை விட்டு வெளியெ வரும் போது பரவலா கேட்கப்பட்ட ரெண்டு கமெண்ட்ல ஒண்ணு படம் நீளம். தவமாய் தவமிருந்தையே வேற மாதிரி எடுத்திருக்கார் கெளதம் அப்படீன்னு ரெண்டாவது.

  • மேக்னா அமெரிக்கா போகப்போறேன்னு சொன்னதும் அவரை இந்தியாவிலேயே இருக்க சூர்யா கன்வின்ஸ் பண்ண முயற்சி செய்வது சூப்பர். அதே போல் அமெரிக்காவில் எடுத்து இருக்கும் காட்சிகள் அழகு. சூர்யா எக்ஸ்ப்ரெஷன் எல்லாம் அருமை. சிம்ரன் சூர்யா பாடல் காட்சியில் சிம்ரன் பழைய இந்தி நடிகைகள் போலவே இருக்கிறார். சிம்ரனுக்கு அம்மாவாய் நிறைய காட்சிகள்.

  • அடியே கொல்லுதே, அஞ்சலை பாட்டு உள்பட எல்லா பாடல்களும் ரசிக்க முடிகிறது.

  • நீங்க சூர்யா ரசிகரா இருக்கணும்னு அவசியம் இல்லை. சூர்யா நடிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தாலெ போதும். படம் பாக்கலாம். படம் முழுக்க சூர்யாதான். கிட்டத்தட்ட 50 First Dates பட வகையறா வாரணம் ஆயிரம். இப்படியெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேக்காம ஜாலியா பாக்கணும்.

ஒரு சூர்யா ரசிகை வந்திருந்தாங்கன்னு சொன்னேனே. நல்லாவே விசிலடிச்சாங்க. நாலு ரங்கமணிகள் இருந்தாங்க. யாருக்கும் விசிலடிக்கத்தெரியாதாம்.

27 comments:

cheena (சீனா) said...

ஓக்கேஎ - படம் பாத்துடறேன் -அப்புறம் மறுமொழி - சேரியா

சின்ன அம்மிணி said...

வாங்க சீனா, படம் தியேட்டர்ல பாருங்க. அப்பதான் நல்லா இருக்கும்

குசும்பன் said...

அவ்வ்வ்வ்வ்வ்:(((

இப்படிக்கு படம் பார்த்து நொந்தவன்

சின்ன அம்மிணி said...

//குசும்பன் said...
அவ்வ்வ்வ்வ்வ்:(((

இப்படிக்கு படம் பார்த்து நொந்தவன்//

உங்க தங்கமணி என்ன சொன்னாங்க குசும்பன். அவுங்களுக்கு சூர்யா புடிக்குமா? ரங்கமணிகள் எல்லாரும் கொஞ்சம் இப்படித்தான் ஆவ்வ்வுன்னுட்டு இருக்காங்க

ஜி said...

நல்லா இல்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நாளைக்கு படத்துக்கு போறோம்.. நாளைக்குத்தான் எங்க ஊர்ல ரிலீஸ் ஆகுது :(((

சின்ன அம்மிணி said...

// ஜி said...
நல்லா இல்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நாளைக்கு படத்துக்கு போறோம்.. நாளைக்குத்தான் எங்க ஊர்ல ரிலீஸ் ஆகுது :(((//

படம் பரவாயில்லீங்க ஜி, என்ன கொஞ்சம் நீளம். சூர்யா நடிப்பு உங்களுக்கு பிடிக்கற மாதிரிதான் இருக்கு. பாருங்க

பிரேம்குமார் said...

கூடிய விரைவில் பார்க்கனும். பதிவுக்கு நன்றி :)

பிரேம்குமார் said...

:)

சின்ன அம்மிணி said...

// பிரேம்குமார் said...
கூடிய விரைவில் பார்க்கனும். பதிவுக்கு நன்றி :)
//

வாங்க பிரேம் குமார், பாருங்க கட்டாயம். ஸ்மைலிக்கு நன்றி

குசும்பன் said...

சின்ன அம்மிணி said...
உங்க தங்கமணி என்ன சொன்னாங்க குசும்பன். //

படத்தை ரசிச்சு பார்க்க தெரியாத............... வந்தது தப்புன்னு சொன்னாங்க:))))

கோபிநாத் said...

நேரம் கிடைக்கவில்லை....ஆனாலும் பார்த்துடுவோம்...;)))

விமர்சனம் நல்லாயிருக்கு...;))

\\\ரசிகை வந்திருந்தாங்கன்னு சொன்னேனே. நல்லாவே விசிலடிச்சாங்க\\

நீங்க தானே!!!??

சின்ன அம்மிணி said...

//\\\ரசிகை வந்திருந்தாங்கன்னு சொன்னேனே. நல்லாவே விசிலடிச்சாங்க\\

நீங்க தானே!!!??//

இல்லை. நிஜமாவே எனக்கு விசிலடிக்கத்தெரியாது கோபி.

rapp said...

எல்லாரும் பாத்துட்டீங்களா?:(:(:(

சின்ன அம்மிணி said...

// rapp said...
எல்லாரும் பாத்துட்டீங்களா?:(:(:(//

வாங்க ராப், ஹையா உங்களுக்கு முன்னாடி பாத்துட்டமே. இன்னுமா பாரீஸ்ல ரிலீஸாகல. சீக்கிரம் பாத்துட்டு உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க

புதுகை.அப்துல்லா said...

ஹை நானும் இங்க சென்னையில பார்த்துட்டேனே :))

ஆயில்யன் said...

படம் பாக்குற ஐடியா இப்ப இல்ல இப்படியே படம்பத்தின செய்திகள்& விமர்சனங்களா படிச்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதான்!

சின்ன அம்மிணி said...

// புதுகை.அப்துல்லா said...
ஹை நானும் இங்க சென்னையில பார்த்துட்டேனே :))//

படம் புடிச்சிருக்கா அப்துல்லா

சின்ன அம்மிணி said...

//
ஆயில்யன் said...
படம் பாக்குற ஐடியா இப்ப இல்ல இப்படியே படம்பத்தின செய்திகள்& விமர்சனங்களா படிச்சுக்கிட்டு இருக்கவேண்டியதுதான்!//

ஆயிலு, விமர்சனம் மட்டும் படிச்சுட்டு இருந்தா எப்படி. படம் பாத்தாதானே எப்படி இருக்குன்னு தெரியும்.

அய்யனார் said...

/கிட்டத்தட்ட 50 First Dates பட வகையறா வாரணம் ஆயிரம்/
50 first dates மாதிரி நடக்குமே :)அது ஒரு விதமான short term memory loss நோய்தான்.... நெறய பேருக்கு இருக்கு..ஸ்வீட் நத்திங்ஸ் இந்தவரிதான் இந்த படத்துக்கு சரியா பொருந்துது :)

சின்ன அம்மிணி said...

// அய்யனார் said...
/ஸ்வீட் நத்திங்ஸ் இந்தவரிதான் இந்த படத்துக்கு சரியா பொருந்துது :)//

ஆமொதிச்சதுக்கு நன்றிங்க அய்யனார். நிறைய பேர் படம் முழுசா பாக்க முடிஞ்சதுக்கு இதுதான் காரணமும் கூட. அப்பா மகனுக்குள்ள இருக்க உறவு , அப்பாவை தியாகியோ, இல்ல கொடுமைக்காரனோ ஆக்குனாதான் நல்லா இருக்குன்னு பல பேர் சொல்றாங்க. நாம என்னாத்தை சொல்ல :)

பழமைபேசி said...

சரி அப்ப, தெகிரியமா இந்த வாரம் போயிப் பாக்க வேண்டியதுதான்.

சின்ன அம்மிணி said...

// பழமைபேசி said...
சரி அப்ப, தெகிரியமா இந்த வாரம் போயிப் பாக்க வேண்டியதுதான்//

கண்டிப்பா பாருங்க பழமைபேசி

குடுகுடுப்பை said...

அடியே கொல்லுதே, அஞ்சலை பாட்டு உள்பட எல்லா பாடல்களும் ரசிக்க முடிகிறது.

//

ஏன் முடியாது அம்மினி.

என்க்கும் படம் பிடிச்சதுங்க

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

சரி அப்ப, தெகிரியமா இந்த வாரம் போயிப் பாக்க வேண்டியதுதான்.//

படத்துக்கு சூர்யாவை பாக்க வரும் இளைஞிகளே ஜாக்கிரத, சூர்யாவோட தாத்தா படம் பாக்க வர்ரார்.

சின்ன அம்மிணி said...

வாங்க குடுகுடுப்பை, அப்பா நீங்களாச்சும் படம் பிடிச்சிருக்குன்னு சொன்னீன்ங்களே

தீரன் said...

ஆமாங்க இங்க நாங்க படம் பாக்க சென்ற பொது கூட, பெண் விசிறிகள் விசில் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள். சூர்யாவுக்கு வெளிநாட்டு சந்தை மிக நன்றாக உள்ளது. முன் இருக்கையில் அமர்வதுக்கு கூட நிறையபேருக்கு இடம் கிடைக்கவில்லை. நாங்கெல்லாம் உசாரா முன்னரே சென்று இடம் பிடித்துக்கொண்டோம். சூர்யா பெயர் போட்டதும் பெரும் சத்தம் , அதிலும் மங்கையர் கூட்டம். என்னோடைய நண்பநூடைய மனைவி உட்பட.

சின்ன அம்மிணி said...

//
தீரன் said...
ஆமாங்க இங்க நாங்க படம் பாக்க சென்ற பொது கூட, பெண் விசிறிகள் விசில் அடித்து தூள் கிளப்பிவிட்டார்கள்
//

இன்னைக்கு இருக்கும் இளம் நடிகர்களில் எனக்கு பிடித்தவர் சூர்யாதான்.