தசாவதாரம் படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும், தசாவதாரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் மனதில் கொண்டு கமல் உருவாக்கியிருக்கிறார்.
1. மச்சாவதாரம் - இரங்கராஜ நம்பி
மச்சாவதாரம் தான் தசாவதாரங்களில் முதல். ரங்கராஜ நம்பியும் படத்தின் முதல் அவதாரம்.
2. பலராம அவதாரம் - பல்ராம் நாயுடு
பேரே சொல்லிவிடுகிறது என்ன தொடர்பு என்று.
3. கிருஷ்ணாவதாரம் - வின்செண்ட் பூவராகன்
கிருஷ்ணரைப்போலவே இவரும் தலித்தாக மட்டும் இல்லை - கருப்பாகவும் இருக்கிறார். கிருஷ்ணன், திரவுபதியின் மானம் காப்பது போல், படத்தில் வின்செண்ட் ஆண்டாள் மானத்தை(மணல் அள்ளும் இடத்தில்) காப்பாற்றுகிறார். கிருஷ்ணர் அம்பு குத்தி இறப்பது போல், கம்பியால் குத்துபட்டு உயிர் துறக்கிறார். பி. வாசு வரும் காட்சியில் வின்செண்ட் பூவராகனுடம் வருபவர்கள் ஐந்து பேர். அவர்களுக்கு மது கொடுத்து ஏமாற்ற நினைப்பார் பி.வாசு. படத்தில் பலர் மனதைத்தொட்ட கதாபாத்திரம்.
4. வராக அவதாரம் - கிருஷ்ணவேணி பாட்டி
வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.முகுந்தா முகுந்தா பாட்டில் கிருஷ்ணவேணி பாட்டி பொம்மலாட்டத்தில், முதலில் வராக அவதாரம் தான் காட்டுவார். படத்திலேயே வயதில் ஆண்டுகள் அதிகம் ஆனவர்.
5. வாமன அவதாரம் - கலிபுல்லா கான்
வாமனர் தான் மாவலியை வெல்ல, விஷ்வரூபம் எடுப்பார்.
6. பரசுராம அவதாரம் - Christian Fletcher
பரசுராமரைப்போலவே சட்டென்று கோபம் வரும். அவரைப்போலவே பல கொலைகள் படத்திலும் செய்வார். பரசுராமர் 21 கொலைகள் செய்தாராம். ப்ளெட்சர் எத்தனை கொலைகள் செய்தார் என்பது தெரியவில்லை. உங்கள் யாருக்காவது எண்ணிக்கை தெரிந்தால் நீங்கள் சொல்லலாம்.
7. நரசிம்ம அவதாரம் - Shingen Narahashi
பேரிலேயே தொடர்பு தெரிகிறதா!!! ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் கையாலேயே எதிரிகளை தாக்குகிறார் தற்காப்புக்கலையின் மூலம். அதுமட்டுமன்றி நரசிம்ம அவதாரம் பிரகலாதனுக்கு குருவாகவும் இருப்பது போல், ஷிங்கன் மற்றவர்களுக்கு, ஆசிரியராகவும் இருக்கிறார்.
8. ராம அவதாரம் - அவ்தார் சிங்
தன் பாடல் வாழ்க்கை முக்கியமில்லை. மனைவிதான் முக்கியம் என்று மனைவி மேல் வைத்த அன்பினால் ராமருக்கு ஈடாகிறார்.
9. கல்கி அவதாரம் - கோவிந்தராஜ் ராமசாமி
கலியுகத்து நாயகன் = படத்தின் நாயகன். கலியுகத்தில் உலகத்தில் அழிவு ஏற்படும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப சுனாமி ஏற்படுகிறது.
10. கூர்மாவதாரம் - புஷ்
திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். அமுதத்திற்காகத்தான் தேவர்களுக்கும், அசுரர்களுக்கு சண்டையே வந்த்தது. ஜார்ஜ் புஷ் இந்த மாதிரி நிறைய பேர்களுக்கு சண்டைமூட்டுவதாகவும் கொள்ளலாம். அல்லது ஆமை மாதிரி மந்தமானவர் என்றும் கொள்ளலாம். (நியூக்ளியர் ஆயுதம் பாய்ச்சலாமா என்று ஒரு கேள்வி கேட்பாரே).
------- *************** ---------
போன முறை சிவாஜி பாக்க போனபோது, ஒருத்தரை சந்திச்சேன். அவர் பெரும்பாலும் வடக்கே வாழ்ந்த்தவர். அப்படியே பேச்சு வாக்கில், இப்பெல்லாம் இந்திப்படம் பாக்கறதை விட்டுட்டேன். தமிழ்ப்படங்களே நல்லா இருக்கு அப்படின்னதும் அவருக்கு வந்ததே கோபம். அப்படியெல்லாம் இல்லை. தூம் 2 சூப்பர் அப்படின்னு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டார். அப்பறம் சுதாரித்துக்கொண்டார். நல்லவேளை அவரை தசாவதாரத்தில் பார்க்க நேரிடவில்லை.
டிஸ்கி: இந்த தசாவதாரம் ஒப்புவமைகள் சொந்த சரக்கல்ல.
22 comments:
ஏன்ன சின்ன அம்மிணி இப்படி டிஸ்கி போட்டுட்டீஇங்க எல்லா விமர்சனங்களையும் படிச்சதில கிடைச்ச ஐடியாக்களா.. இது...:)
//அப்பறம் சுதாரித்துக்கொண்டார். நல்லவேளை அவரை தசாவதாரத்தில் பார்க்க நேரிடவில்லை.
//
அடுத்த மொற பாத்தா No Entry, Guru, Kushi, Run, Gajini, Tere naam, இதெல்லாம் நல்ல Hindi படங்கள் அப்படினு சொல்லீருங்க..
:-))
வாங்க அக்கா வாங்க...எப்படியோ நீங்களும் தசாவதாரத்தை பத்தி போட்டுட்டிங்க...மகிழ்ச்சி ;)
டிஸ்கி எல்லாம் எதுக்கு ஒரு பதிவு விடமா எல்லா தசாவதார பதிவையும் படிச்சிட்டேன் ;)
நல்ல ஒப்புவமைகள் தாம் அம்முணியோவ்....
இரங்கராஜ நம்பியை மதவெறியனாக பார்க்கிறீர்கள்.
எனது பார்வையில் இரங்கராஜ நம்பி ஓர் உரிமைப்போராளியாக தெரிகிறார்.
நீ இந்த கடவுளைத்தான் கும்பிட வேண்டும் என்று கட்டளையிடும் உரிமை மன்னனுக்கு கிடையாது.
எந்த கடவுளை கும்பிட வேண்டும் என்பது தனிப்பட்ட உரிமை,அனைத்து ஆணைகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு அடிபணிவது முதுகெலும்பில்லாத்தனம்.
மன்னன் சொன்னாலும் என் நெஞ்சில் இருக்கும் இரங்கராஜனை இந்த தில்லையிலிருந்து பெயர்க்க விடமாட்டேன் என்று முட்டி நிற்கும் இரங்கராஜ நம்பி,உரிமைகளை கேட்டு போராடும் யாவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி!!
"எட்டில் ஐந்து எண் கழியும்,என்றும் ஐந்தில் எட்டு எண் கழியாது!!"
இந்த வரிகளை சுட்டி,நம்பியை மதவெறியன் என குறிப்பிடுகிறீர்கள்!!
என்றுமே தாம் கொண்ட கொள்கையில் மாற்றமிருக்காது என்பதை நம்பி இந்த வரியில் குறிப்பிடுகிறார்.மதவெறியை அல்ல என்பது எனது கருத்து!!
மேற்கண்ட வரியை மேற்கோள்காட்டிய நீங்கள் பின்வரும் வரியையும் கேட்டிருக்கலாம்,
"கல்லை மட்டும் கண்டால்,கடவுள் தெரியாது!!கடவுள் மட்டும் கண்டால்,கல்லடி தெரியாது!!"
கடவுள் என்பவன் கல்லில் மட்டும் வாழ்பவனல்ல என்றும்,கடவுளுக்காக கல்லடியையெல்லாம் தாங்கிக்கொள்ளலாம் என்றும்...
"சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது;தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது"
என்று மொத்த மதமோதல்களையும் தவறு என்று குறிப்பிடுகிறார் நம்பி!!
ஆகவே,நம்பி,மன்னன் என்ற இடத்தில் இருந்தால் சைவத்திற்கு முக்கியத்துவம் தராமல் இருந்திருக்கலாம்;ஆனால்,இரண்டாம் குலோத்துங்கன் இழைத்த கொடுமையை இழைத்திருக்கமாட்டான் என்பது எனது கருத்து!!
பின்குறிப்பு : நான் வைணவன் இல்லை!!நான் சைவ சமயத்தை சார்ந்தவன்,சோழ நாட்டின் வழி வந்தவன்!!சோழன் என்றாலும்,சைவன் என்றாலும் நியாயம் என்ற ஒன்றே வெல்லும்!!!
வாங்க கயல், டிஸ்கி போடாட்டி அரசியல், நுண்ணரசியல் இதிலெல்லாம் மாட்டிக்கிடுவோமே. அரசியல் தான் நமக்கு ஒத்துக்காதே
\அடுத்த மொற பாத்தா No Entry, Guru, Kushi, Run, Gajini, Tere naam, இதெல்லாம் நல்ல Hindi படங்கள் அப்படினு சொல்லீருங்க..\\ வாங்க வழிப்போக்கன். குடுத்தாலும் குடுத்தீங்க சூப்பர் ஐடியாவாக்குடுத்தீங்க. மறுபடியும் அவர பாக்காமயா போய்டுவேன்.
\வாங்க அக்கா வாங்க...எப்படியோ நீங்களும் தசாவதாரத்தை பத்தி போட்டுட்டிங்க...மகிழ்ச்சி\\ நமக்கு பதிவு போட ஒரு விஷயம் கிடைச்சா விடுவோமா. அது சரி கோபி உங்க அடுத்த பதிவு எப்போ?
வாங்க ஈரவெங்காயம். முதல் வருகைக்கு நன்றி. போட்டோல குட்டிப்பாப்பா என்ன அனாயாசமா போஸ் குடுக்குது
முதல் வருகைக்கு நன்றி தமிழ் பெயரில்லா தமிழன்!! You are absolutely entitled to have your opinion. கமல் ரங்கராஜ நம்பியை வீர வைஷ்ணவராத்தான் சித்தரிக்கிறார். நடு நிலைமயாளராய் இல்லை. ரங்க ராஜ நம்பி மேல் கல்லெறியும் ஒரு சிறுவனை ஒரு நொடியே காட்டினாலும் ஆளுடைப்பிள்ளை மாதிரியே காட்டியிருப்பார். சைவத்துக்காக வாதில் பலரை வென்று கழுவில் பலரை ஏற்றியதில் ஆளுடைப்பிள்ளைக்குத்தான் பெரும் பங்கு உண்டு. Very cleverly handled by Kamal
நன்றிங்க அம்மிணி...
(ஈர வெங்காயம் இப்டிதான் ஹாயா இருக்கும்...அதுக்குதான் போட்டோ !)
முதலில் இதை யாராவது கமலுக்கு அனுப்புங்கப்பா.! அவரே இந்த மாதிரியெல்லாம் உக்காந்து யோசித்திருப்பாரான்னு தெரியலை. (அதென்ன ஜகா டிஸ்கி )
எல்லா அனுபவம்தானுங்க...பல பேர சமாளிச்சாச்சு....
சினிமா, அரசியல் எல்லாத்துலயும் தமிழ்நாடு முன்னேறலனு நெனப்பு...
வாங்க தாமிரா, தனி மடல்ல வந்தது. கொஞ்சம் நம்ம சரக்கும் சேத்து போட்டிருக்கேன்.
பேசாம என்னோடதுன்னு எல்லாரும் நினைக்கறமாதிரி விட்டுருக்கலாமோ!!!
//ஆமை மாதிரி மந்தமானவர் என்றும் கொள்ளலாம்.//
செம நக்கல் அடிச்சு இருக்கீங்க. :)))
\\செம நக்கல் அடிச்சு இருக்கீங்க\\
ஆஹா அம்பி, வாங்க, இன்னித்த அமுதம் = பெட்ரோலுக்காக புஷ் பண்ணாததா!!
படத்தோட இயக்குனர் ரவிக்குமார், "அப்படி எல்லாம் யோசிச்சி அந்த பத்து கேரக்டர்களை உருவாக்கல, முடிஞ்ச வரைக்கும் பத்து அவதாரங்களுடைய பேர்களும் வர்ற மாதிரி வெச்சிருக்கோம்" அப்பிடின்னு சொல்லிட்டார். இதை தனியா உக்காந்து யோசிச்சி மெயில் அனுப்பினவருக்கு சினிமாவில நல்ல எதிர்காலம் இருக்கு...
வாங்க கவ்ரி சங்கர், நல்ல கற்பனைதான் அவருக்கு.
அட! நம்ம சின்ன அம்மிணியா இப்படின்னு......ஆனந்தமாப் படிச்சேன்.
டிஸ்கி போட்டு என்னைக் காப்பாத்திட்டீங்க:-))))
//அட! நம்ம சின்ன அம்மிணியா இப்படின்னு......ஆனந்தமாப் படிச்சேன்\\ டீச்சர் ஆவ்வ்வ்வ்
ஆவ்வ்வ்வ்
கூர்மாவதாரம் - புஷ்
சரியாச் சொன்னீங்க அம்மணி, இந்த ஆமை பூந்தா எந்த வூடும் உருப்படாதுங்கம்மினி. பாவம் நேச ஆமைங்கள என்னத்துக்கு கொற சொல்லோனும்...
//சரியாச் சொன்னீங்க அம்மணி, இந்த ஆமை பூந்தா எந்த வூடும் உருப்படாதுங்கம்மினி. // வாங்க விஜய், ஆப்பிரிக்க நாடுகள்ல இல்லாத அட்டூழியமா, அதயெல்லாம் பேச்சு வார்த்தையில முடிக்கத்தான் முயற்சி பண்ணறாங்க. ஏன் இலங்கைலயும் தான் எவ்வளோ நடக்குது. எதையும் கண்டுக்க மாட்டெங்கறார் ஆமையார்
Post a Comment