ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு போறோம். என் பெண்ணுக்கும், என் தம்பி பையனுக்கும் காது குத்து விழா. குலதெய்வத்துக்கு படையல் போட்டு தான் காது குத்தணும்னு என் பெற்றோர் விருப்பத்துக்காக எல்லாரும் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு போறோம்.
நான் +2 படிச்சு முடிச்சதுமே மேற்படிப்புக்காக சென்னைக்குப்போய்விட்டோம். அப்பறம் இப்பத்தான் ஊருக்கு நான் வர்றேன். எல்லாரும் படையலுக்கான ஆயத்தங்கள் செய்யத்தொடங்கினார்கள். வேன் டிரைவர் ஏதோ ஸ்பேர் பார்ட்ஸ் லூஸா இருக்கு, மெக்கானிக் கடை ஏதாச்சும் இருக்கான்னு பாக்க்ணும் சார் என்று சொல்ல, நானும் அதே சாக்கில் ஊரை சுற்றிப்பார்ர்க்க கிளம்பினேன்.
ஒரு டூ வீலர் மெக்கானிக் கடைதான் இருக்கு என்று ஒருத்தர் கைகாட்ட அங்கே போனோம். கடைப்பையனிடம் வேன் டிரைவர் விசாரித்துக்கொண்டிருந்த போது உள்ளெ கவனித்தேன். அது சுப்பிரமணி மாதிரி இருந்தது.
"நீங்க சுப்பிரமணிதானே" என்றேன். சுப்பிரமணியும் என்னைப்பார்த்து அடையாளம் கண்டு கொண்டான். எவ்வளவு நாள் கழித்து வந்திருக்க என்று விசாரித்தான். குழந்தைக்கு காது குத்து என்று சொல்லி மதியம் படையல் முடிஞ்சதும் சாப்பாட்டுக்கு வரச்சொல்லி அழைத்தேன். கொஞ்சம் தயங்கி பின் சரி வர்றேன் என்றான்.
சுப்பிரமணியும் நானும் பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தோம். நான் +2 வில் சையன்ஸ் க்ரூப் எடுத்தேன். அவன் ஏதோ வகேஷனல் கோர்ஸ் படித்தான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். அவன் அம்மா ஒரு சில வீடுகளில் வீட்டு வேலை செய்வாள். தோட்டவேலைக்கு ஆள் எடுக்கும்போது அதுக்கும் போவாள். அது மட்டும் இல்லாமல் உலகத்திலேயே 'பழமையான தொழிலும்' செய்வாள். அதற்காகவே சுப்பிரமணியுடன் பழகுவதற்கு என் வகுப்பில் பலருக்கு அவர்கள் பெற்றோரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவளைப்பலரும் நேரடியாகவே திட்டுவார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாள். சுப்பிரமணியை அவன் வீட்டில் இறக்கி விடுவேன். என்னைப்ப்பார்த்தால் வா ராசா காப்பி குடிச்சிட்டுப்போ என்பாள். ஒரு நாள் அவன் வீட்டில் போய் சாப்பிட்டதை என் தம்பி கோள் மூட்டிக்குடுக்க என் வீட்டில் எனக்கு செமத்தியாக அடி விழுந்தது. ஆனாலும் அவனுடன் தான் நான் பள்ளிக்கு போவேன். சைக்கிளில் அவனுடன்தான் சவாரி. சைக்கிளில் என்ன கோளாறு ஏற்பட்டாலும் சரி செய்து விடுவான். வீட்டில் திட்டினாலும் நான் படிப்பில் கெட்டி என்பதனால் கொஞ்சம் கண்டு கொள்ளாமல் விட்டார்கள். எல்லாரையும் போல வெளியூர் போனதும் பழைய தொடர்புகள் என்னை விட்டுப்போனது. ரொம்ப வருஷம் கழித்து அவனைப்பார்த்ததில் பழைய நினைவுகள் வந்தன.
காது குத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டு அவனுடன் தனியா கப்பேசிக்கொண்டிருந்தேன். அவனுக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை. 'உன் அம்மா இப்ப எப்படி இருக்கிறார்கள்' என்றேன். அவன் முகம் வாடியது. அது அவன் அம்மாவைப்பற்றி கேட்டதனாலோ என்று நினைத்து, உன்னை வருத்தப்படுத்தணும்னு நான் கேக்கலை என்றேன்.
'நான் கல்லூரியில் படிச்சப்போ, என் அம்மாவுக்கு நான் நல்லாப்படிக்கறதில்லைன்னு கோவம். ஒருநாள் ஏதோ சண்டையில் அம்மாவைக் கெட்ட வார்த்தைல ரொம்ப திட்டிட்டு ஓடிப்போயிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வந்தேன். வேற எங்க போறது. ஊர்ல எல்லாரும் சொல்லித்திட்டின "அந்த" வார்த்தைகள நான் சொன்னதக்கேட்டதில இருந்து, அம்மா பழைய மாதிரி இல்லை. நாளாக நாளாக ரொம்ப பலவீனமா இருந்தாங்க. அந்த சண்டை நடந்து 3 மாசத்தில இறந்து போயிட்டாங்க. சாகறதுக்கு முன்னாடி அவங்க சேமிச்ச பத்தாயிரத்தைக்குடுத்து ஒரு மெக்கானிக் கடையாவது வைச்சு பொழச்சுக்கோன்னு பணத்தைக்குடுத்துட்டு செத்துப்போயிட்டாங்க. அவங்க அம்மாவா எனக்கு எல்லாம் செய்தாங்க. நாந்தான் எதுவும் செய்யலை' என்றான்.
பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர்
Sunday, 18 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
இது அன்னையர் தினத்தன்னைக்கே போடவேண்டிய கதை. கொஞ்சம் லேட்டு. Better late than never.
படிக்கவே நெகிழ்வாக இருக்கு.
மனதைப் பிசைகிறது..
அக்கா கையை கொடுங்க..கலக்கிட்டிங்க...ரொம்ப அருமையாக எழுதியிருக்கிங்க..;))
வாழ்த்துக்கள் ;)
நிறைய எழுதுங்க ;)
உண்மைச் சுடவும் செய்யும் உள்ளத்தை உருக்கவும் செய்ய்யும்
'கதை' நல்லா வந்துருக்கு அம்மிணி.
நன்றி வடுவூர் குமார், ரவிசங்கர். என்னோட முதல் முயற்சி
ஊக்குவிப்புக்கு நன்றி கோபி, ராசாத்தி மாதிரி கதைகள் தான இதுக்கு இன்ஸ்பிரேஷன்
வாங்க தி ரா ச, உருக்கமான கதைதான், நன்றி
வாங்க டீச்சர். நீங்க நல்லாருக்குன்னு சொன்னப்பறம் இனி யாரும் மறு பேச்சு சொல்ல முடியாது பாருங்க
//பெண்களில் நல்ல பெண்கள் கெட்ட பெண்கள் உண்டு
தாயாரில் நல்ல தாயார் கெட்ட தாயார் உண்டோ
- ஆதி சங்கரர்//
உண்மைதானே..:)
கதை நல்லாயிருக்குங்க சின்ன அம்மிணி:)
வாங்க ரசிகன், நன்றி
super ammini!
kalakkungka!
நன்றி தென்றல் சங்கர், அடிக்கடி நம்ம பதிவுக்கு வந்துட்டு போங்க
அனைவரது கருத்துகளையும் வழிமொழிகிறேன்.
நன்றி வேளராசி
நெகிழ்வான கதை..
/
சாகறதுக்கு முன்னாடி அவங்க சேமிச்ச பத்தாயிரத்தைக்குடுத்து ஒரு மெக்கானிக் கடையாவது வைச்சு பொழச்சுக்கோன்னு பணத்தைக்குடுத்துட்டு செத்துப்போயிட்டாங்க. அவங்க அம்மாவா எனக்கு எல்லாம் செய்தாங்க. நாந்தான் எதுவும் செய்யலை' என்றான்
/
செம டச்சிங்கான ஸ்டோரி
நல்லா இருக்கு. பாராட்டுக்கள்.
வாங்க கயல், நன்றி
\\செம டச்சிங்கான ஸ்டோரி\\ பாராட்டுக்கு நன்றி சிவா
Post a Comment