Saturday, 26 April 2008

அனுசரணை - மற்றவர்களின் தேவை

சக மனிதர்களின் இயலாமை, செயல்பாடுகளின் எல்லையைப்புரிந்து கொண்டு எந்த அளவுக்கு நாம் அனுசரணையாய் இருக்கிறோம். மலையை வளைப்பது மட்டுமே ஆற்றலாய்க்கருதுகிறோம். முடியாதவர்களை ஒரு படி குறைவாகத்தான் நினைக்கிறோம். இது சின்ன வயசில் பள்ளிப்படிப்பிலேயே ஆரம்பம் ஆகிறது. அவளைப்பார் எப்பவும் முதல் மதிப்பெண்தான். இவனைப்பார் விளையாட்டில் எப்பவும் வெற்றிதான் என்று ஒப்பீடுகள். இந்த ஒப்பீடுகளில் உயர்ந்து நிற்க முடியாத ஒரு சில மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்.


இந்தச்சின்ன வயசில் பெற்றோர்கள் ஒரு விதமாக வளர்த்து விடுவது, பள்ளியில் மற்ற குழந்தைகளால் Bullying என்று வேறு விதமாக உருவெடுக்கிறது. இந்த புல்லியிங் ஆல் பாதிக்கப்படுபவர்கள் வாழ்க்கையில் தான் எதற்கும் உதவாதவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்படுகிறார்கள்.

*** ***** ******

சாரா ரைட் என்ற நான்கு மாதக்குழந்தை வெலிங்டனில் உள்ள ஜான்சன்வில் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் பிரபலமாகி வரும் ஆசிரியை. சாராவிற்கும் மேற்சொன்னவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? நான்கு மாதக்குழந்தையான சாரா எப்படி ஆசிரியை ஆக முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா??

Roots of Empathy என்ற சமூக நிறுவனத்தார் இப்படி சாராவை, இங்கே வெலிங்டனில் உள்ள ஜான்சன்வில்லில் உள்ள ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அழைத்து வருகிறார்கள். கூடவே சாராவின் அம்மாவும்தான். வேறு ஒரு ஆசிரியை, மாணவர்களிடம் சாராவின் செயல்பாடுகள், செயல்பாடுகளின் எல்லைகள், தேவைகள், சாரா மற்றவர்களிடம் எப்படி தொடர்பு கொள்ளுகிறாள் போன்ற கேள்விகளை கேட்டு அவர்களிடமே பதில் வாங்குகிறார். தன்னால் எதுவுமே செய்து கொள்ள முடியாத சாராவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடமே கேட்டு பதில் வாங்குகிறார்.



இதன் மூலம் பள்ளிச்சிறார்க்கு எல்லோராலும் எல்லாமும் செய்ய முடியாது என்பதை உணர்த்துகிறார்கள். இதன் மூலம் குழந்தைகளின் கோபம் நிறையக்குறைந்திருப்பதாகச்சொல்கிறார்கள். மற்றவர்களின் தேவைகள், இயலாமை ஆகியவையை சிறுவயதிலேயே புரிந்து கொள்ளும் குழந்தைகள், பதின்ம வயதுகளில் நல்ல சமுதாய நோக்கோடு இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். இது போல 10 பள்ளிகளில் இந்த Roots of Empathy முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாராவைப்போல இன்னும் பல குழந்தைகள் இது போல மற்ற பள்ளிகளில் கவுரவ ஆசானாக பணிபுரிகிறார்கள்.



இம்முறை நல்ல வரவேற்பை எல்லாத்தரப்பினரிடமும் தந்துள்ளது. பெற்றோரும் இதை வரவேற்கின்றனர். சாராவின் அக்காவும் அதே பள்ளியில் படிக்கின்றாள். "Despite a smelly accident, Sara is very popular" என்று சந்தோஷமாக எல்லாரும் சொல்கிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் தாழ்வு மனப்பான்மையைக்களைய முடியும் என்று நம்புகிறார்கள். சிறிய வயதில் மற்றவர்கள் மேல் அனுசரணை வரும் எண்ணங்களை விதைப்பதன் மூலம் நல்ல சமுதாயத்தை உருவாக்கமுடியும் என்பதில் சந்தேகமென்ன? ஒருவர் நன்றாகப்படிப்பவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, சமுதாயம் இருவரையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கும் நிலை இதன் மூலம் நிச்சயம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. அல்லது வேறு எந்த அளவுகோலும் சக மனிதனை சக மனிதனாகக்கருதுவதை இது போன்ற இயக்கங்கள் மேம்மேலும் வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

7 comments:

நிஜமா நல்லவன் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீக.

கோபிநாத் said...

சூப்பர் நியூஸ் ;))

நன்றாக சொல்லியிருக்கிங்க.

பதிவுக்கு நன்றி அக்கா ;)

வல்லிசிம்ஹன் said...

அழகான கருத்து.
இதனால் நிறையவே பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சின்ன அம்மிணி said...

வாங்க நிஜமா நல்லவன், நீங்க நிஜம்மாவே நல்லவன் தான்,

நன்றி கோபி, வல்லிம்மா

நிஜமா நல்லவன் said...

///சின்ன அம்மிணி said...
வாங்க நிஜமா நல்லவன், நீங்க நிஜம்மாவே நல்லவன் தான்,///


அக்கா நீங்களுமா நம்புறீங்க?

சின்ன அம்மிணி said...

நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு, சரியா நிஜமா நல்லவன் அவர்களே

நிஜமா நல்லவன் said...

///சின்ன அம்மிணி said...
நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு, சரியா நிஜமா நல்லவன் அவர்களே//



நன்றிக்கா.